தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்! - 30 - 03 - 2017


தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்! - (30 - 03 - 2017)

ஆனந்த ரங்கம் பிள்ளை

📆 நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரான ஆனந்த ரங்கம் பிள்ளை 1709ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பு+ரில் பிறந்தார். 

📆 இவர் பல தொழில்களை செய்து வந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர். பலமொழிகளில் புலமை கொண்ட இவர் இந்திய மன்னர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார்.

📆 முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாக, ஜாகீர்தாராகவும் நியமிக்கப்பட்டார். 1749-ல் 'துபாஷி" பட்டத்தை ஆளுநர் இவருக்கு வழங்கினார்.

📆 ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நு}ற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.

📆 மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவு+ர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள்கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

📆 இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸுடன் (ளுயஅரநட Pநிலள) ஒப்பிடப்பட்டு, 'இந்தியாவின் பெப்பீஸ்" எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்பட்ட இவர் 51-வது வயதில் (1761) மறைந்தார். 
முக்கிய நிகழ்வுகள்
🎭 உலகப் புகழ்பெற்ற டச்சு ஓவிய மேதை வின்சென்ட் வான் கோ (ஏinஉநவெ ஏயn புழபா) 1853ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி ஹhலந்தில் பிறந்தார்.
💊 1842ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி அறுவை சிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
✎ 1858ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்டது.